சனி, அக்டோபர் 15, 2011

.

وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ َ 31

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். 24:31.



இழக்கும் கண்ணியம்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பென் சுதந்திரம் பேசுவோர்; பெண்களுக்கான சுதந்திரம் எதுவென்று தெரிந்திருந்தும் அதை இஸ்லாம் பேணச் சொல்லி வற்புருத்துவதால் அதை சட்டமாக்கி ஒழுங்குப் படுத்தி வருவதால் இஸ்லாமிய எதிர்ப்பைக் காட்டுவதற்காக மனமுரண்டுடன் இஸ்லாமியச் சட்டம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கிறது பர்தாவுக்குள் முடக்கி மூளையில் போட்டு விடுகிறது அதனால் அவர்கள் வெளி உலகம் தெரியாத அப்பாவிகளாக்கப் பட்டு வருகிறார்கள். கல்வி கற்க முடிவதில்லை> வேலைக்குச்சென்று பொருளீட்ட முடிவதில்லை என்றுக் கூக்குரலிடுவதுடன் சில முஸ்லிம் பெயர் தாங்கிகளைக் கொண்டும் இதேக் கருத்தை அலற விடுவார்கள் .

பாருங்கள் பர்தா சட்டத்தை முஸ்லிம்களே எதிர்க்கின்றார்கள்; இந்தக் கால முஸ்லிம்களுக்கு விருப்பமில்லாத ஒன்றை பழமைவாத முஸ்லீம்கள் அவர்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கின்றார்கள் என்று அவர்களது ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக்கி சலிப்புத் தட்டும் வரை பிரசுரிப்பார்கள்.

ஆணுக்கு நிகராக கல்வி கற்று> ஆணுக்கு நிகராக பொருளீட்ட வேண்டும்; என்று ஆர்வத்துடன் புறப்பட்ட அதிகபட்ச பெண்கள் கல்வி கற்கும் போது ஆசிரியர்களாலும்> சக மாணவர்களாலும் சீரழிக்கப் படுவதையும்> அதற்கடுத்து பொருளீட்டச் செல்லுமிடங்களில் நிர்வாக மேலாளராலும்> சக ஊழியர்களாலும் சீரழிக்கப்படுவதை வல்ல இறைவன் மேல்படி ஊடகக் காரர்களைக் கொண்டே சில நேரங்களில் தோலுரித்துக் காட்ட வைத்து விடுவான்.

  • உலகம் முடியும் காலம்வரை இஸ்லாமிய சட்டம் நடைமுறைப் படுத்த சாத்தியமானதே !
  • அது ஏகஇறைவனின் சட்டமாகும் !
  • அதற்கு மாற்றமான சட்டமே நடைமுறைப்படுத்த சாத்தியமற்றது !

என்பதை பர்தா சட்டத்தை மீறும் பெண்களுடைய அவலநிலையை இன்று உலக ஊடகங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

வேலைக்கு அனுப்பப் படுவதால்...
தான் மட்டும் ரசிக்க வேண்டிய அழகும் வனப்பும் வாய்ந்த இளமைப் பருவ மனைவியை வேலைக்கு அனுப்பப்படுவதால் பிறர் ரசிக்கவும் மறைமுக அனுமதி வழங்கி விடுகின்றார்கள்.

வேலைக்குச் செல்லும் பெண்கள் தாங்கள் பணிபுரியும் கம்பெனி மேலாளர்> மற்றும் சக ஊழிர்கள் தங்களுடைய வீட்டிற்கு வரவும்> அவர்களது வீட்டிற்கு இவர்கள் செல்லவும்> வெளியில் பார்ட்டி> பீச் என்று சுற்றித் திரிவதையும் கணவன் மார்களால்> அல்லது தாய்-தந்தையரால் தடுக்க முடிவதில்ல.  காரணம் அவர்களிடம் கைநிறைய சம்பளமும்> வெளி உலக அனுபவமும் இருப்பதால் தடுத்தால் தடையை உடைத்து தனி வாழ்க்கை அமைத்துக் கொள்வார்கள்.

மேல்படி நிர்வாக மேலாளர் மற்றும் சக ஊழியர்களால் அவர்கள் பாலியல் உறவுக்கு உட்படுத்தப் படுகின்றனர் மிக குறைந்தபட்ச பெண்கள் மட்டுமே அதிலிருந்து விதிவிலக்காக தங்களை தடுத்துக் கொள்கின்றனர் அதிகபட்ச பெண்கள் உத்தியோக உயர்வுக்காகவும் இன்ன பிற தேவைகளுக்காகவும் தங்களை தாமே முன்வந்து அர்ப்பணித்து விடுகின்றனர்.

தங்களை தாமே முன்வந்து அர்ப்பணித்து விடுவதற்கு காரணம் அவர்களில் அதிகமானோர் தங்களது கல்லூரி வாழ்க்கையிலேயே ஆசிரியர்களாலும்> சக மாணவர்களாலும் பாலியலுக்கு உட்படுத்தப்பட்டு பெண்களுடைய இயற்கையான கூச்சத்தை தெளியவைத்து சகஜ நிலைக்கு கொண்டு வந்து விடுகின்றனர்.

பருவ வயதை கடந்தவர்கள் கல்லூரிகளில் முதுநிலை கல்வி பயிலும் காலங்களில் முறையற்ற பாலியல் உறவில் ஈடுபட்டவர்கள் அதிகமான சதவிகிதத்தினர் என்று சர்வதேச பாலியல் அமைப்பினர் டெல்லியில் நடத்திய ஏழாவது மாநாட்டில் புள்ளி விபரங்களுடன் சமர்ப்பி;க்கின்றனர். அதில் சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் நாராணரெட்டி சென்னை நகர மாணவ- மாணவியரிடத்தில் திருமனத்திற்கு முன் தாம்பத்திய உறவில் ஈடுபட்டவர்களுடைய தகவல் அறிய 9000 மாணவ மாணவிகளுக்கு கருத்தாய்வு படிவம் அனுப்பப் பட்டதாகவும் அதில் 11 சதவிகிதம் பேர் பதில் அனுப்பினர் என்றும் அதில் மாணவர்களில் 52 சதவிகிதத்தினரும்> மாணவிகளில் 60 சதவிகிதத்தினரும் திருமனத்திற்கு முன்பு தாம்பத்தியத்தில் ஈடுபட்டு விட்டதாக மேல்படி தகவலை புள்ளி விபரத்துடன் மாநாட்டில் சமர்ப்பித்தார். ஆதார நூல் : சினிமா ஒரு தீமையா ?

இவ்வாறு அதிகபட்ச பெண்கள் கல்லூரி வாழ்க்கையிலேயே அழிந்து விடுவதால் அதற்கடுத்து வேலைக்குச் செல்லும் போது தாராளமாக தங்களை தாரை வார்க்கத் தொடங்குகின்றனர். கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு கணவன் மார்கள் தங்கள் மனைவியை வேலைக்கு அனுப்புவதை தடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் மனைவியருக்கு உங்கள் மீது சில உரிமை என்னவெனில்> அவர்கள் உங்களுக்கு விருப்பமில்லாத ஒருவரை உங்கள் விரிப்பை மிதிக்க விடக்கூடாது. மேலும்> உங்களுக்கு விருப்பமில்லாத ஒருவரை உங்கள் வீட்டினுள் வர அனுமதிக்கக்கூடாது. ... (திர்மிதி)

சில இஸ்லாமிய நாடுகளிலும்...
பெண் சுதந்திரம் பேசப்பட்டு பெண்களை தொழில்நுட்ப கல்வி கற்க வைத்து ஆணுக்கு நிகராக வேலைக்கு அனுப்பிய சீன கலாச்சாரத்தால் வார்த்தெடுக்கப்பட்ட மலேசிய முஸ்லிம்களும் அதை பின்பற்றினர். ஆனால் இன்று கைகளைப் பிசைந்து கொண்டு '' உன்னால் நான் கெட்டேன் '' என்று நிற்கின்றனர்.

மலேஷியாவில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகளுக்கு அவர்களது உடையலங்காரமே காரணம் என்றுக் கூறி ஆண் ஊழியர்களுடைய பாலுணர்வை தூண்டக் கூடிய வகையில் அங்க அவயங்கள் வெளியில் தெரியும் விதம் உடை அணிந்து வேலைக்கு வரக்கூடாது என்று சட்டமியற்றினர் அதிலும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறைந்ததாக தெரியவில்லை.

அதற்கடுத்து தங்களது முக அழகை மெருகேற்றக் கூடிய மேக்கப் வகையறாக்களை இட்டுக் கொண்டு வேலைக்கு வரக் கூடாது என்று சட்டமி;யற்றி இருக்கின்றனர்.
  • சக ஆண் ஊழியர்களுக்கு மத்தியில் பெண்கள் தங்களுக்கே உரித்தான புன்முறுவலுடன் வளைந்து> நெளிந்து பேசக்கூடாது> என்று சட்டமியற்ற முடியுமா ? முடியாது !
  • தனி அறையில் இருக்கும் மேலாளர் கோப்புகளை எடுத்துக்கொண்டு அறைக்கு வர உத்தரவிட்டால் பெண் செகரட்டரிகள் தனித்து செல்லக் கூடாது என்று சட்டமியற்ற முடியுமா ? முடியாது !
  • நிர்வாகத்தில் ஒன்றாகப் பணிபுரியும் ஆண்-பெண் ஊழியர்கள் பணி நேரம் முடிந்தப்பின் பார்க்> பீச் என்று சுற்றித் திரியக்கூடாது என்று சட்டமியற்ற முடியுமா ? முடியாது !

இவைகளும் ஆண் ஊழியர்களுக்கு பாலுணர்வைத் தூண்டக்கூடிய செயல்பாடுகளாகும். ஆண்-பெண் இணைந்து பணிபுரியும் இடங்களில் நிகழும் பாலியல் சேட்டைகளை மேல்படி சட்டங்களால் மட்டும் கட்டுப்படுத்திட முடியாது !

பெண்கள் வேலைக்கு வரவேண்டாம் என்ற சட்டம் இயற்றாதவரை அரசு அலுவலகங்கள்> தனியார் கம்பெனிகள்> தொழிற்சாலைகளில் நடக்கும் மேல்படி முறையற்ற பாலியல் குற்றங்களை தடுக்கவே முடியாது.

இதற்கு தீர்வு தான் என்ன ?
  • பெண் குடும்பத்தை நிர்வகிக்க வேண்டும்.
  • குடும்பத்தை நிர்வகிக்க ஆண் பொருளீட்ட வேண்;டும். இதுதான் தீர்வு !

இஸ்லாத்திற்கு முந்தைய வேதக்காரர்கள் பெண்கள் விஷயத்தில் ஏற்றத் தாழ்வு கற்பித்த போது பெண்களும் ஆண்களைப் போன்றவர்களே என்றுக் கூறி சமன்படுத்திய இஸ்லாம் ஆண்கள் பெண்களை நிர்வாகிப்பதால் பெண்களை விட ஆண்கள் இந்த விஷயத்திற்காக சற்று உயர்வாக கருதப்படுகிறார்கள்  என்றுக் கூறி ஆண்களை உழைத்து குடும்பத்தை கட்டிக் காக்க உற்சாகமூட்டியது. ...உங்கள் மீது அவர்(பெண்)களுக்கிருக்கும் உரிமை அவர்களுக்கு நீங்கள் சரிவர உணவும்> உடையும் அளிப்பதாகும். (திர்மிதி)

கட்டுக்கோப்பான குடும்பத்தை கட்டமைக்க...
ஒழுக்கமிக்க உறுப்பினர்களைக் கொண்ட கண்ணியமிக்க கட்டுக்கோப்பான குடும்பம் அமைவதற்கு பெண்கள் வீட்டில் தங்கி இருப்பது இன்றியமையாததாகும்.

சுமந்து பெற்று பாலூட்டுவதிலிருந்து நடக்கும் பருவத்தில் கல்வியை கொடுத்து உரிய வயதில் ஒழுக்கத்தை ஊட்டி வளர்ப்பது வரை அன்னை தந்தையில் அன்னையே முன்னிலை வகிக்கிறார் எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே பின் நல்லவராவதும்> தீயவராவதும் அன்னை வளர்க்கையிலே ... 

அறிவையும்> ஒழுக்கத்தையும் ஊட்டி வளர்க்க வேண்டிய அன்னை வீட்டை விட்டு வெளியேறி வேலைக்குச் சென்றுவிடுவதால் தனது பிள்ளைகளுக்கு வேலைக்காரியால்; அறிவையும்> ஒழுக்கத்தையும் ஊட்டி வளர்க்க முடியாது !

வீட்டை விட்டு வெளியேறி வேலைக்குச் சென்று விடுவதால் தானும் கண்ணியமிழந்து> தான் பராமரித்து ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டிய குழந்தைகளும் ஒழுக்கம் கெட்டவர்களாகி பிற்காலத்தில் அவர்களது சேட்டைகளால் இவர்களுக்கு தலைகுணிவு ஏற்படுகிறது.

இறுதியாக...
பெண் குழந்தைகளை பருவ வயது வரை கல்வி கற்கச்செய்து> பூப்பெய்ததிலிருந்து திருமணத்திற்கு இடைப்பட்ட காலம் வரை வீட்டில நல்லொழுக்கப் (ஆண்மீக) பயிற்சியை> அல்லது மதரஸாக்களில் ஆண்மீக கல்வியை அளித்து திருமனம் செய்து வைத்தால் அந்தப் பெண்ணால் ஒழுக்கமிக்க உறுப்பினர்களைக் கொண்ட கண்ணியமிக்க குடும்பத்தை உருவாக்க முடியும்.

அழகும்> வனப்பும் வாய்ந்த விலை மதிக்க முடியாத பொக்கிஷத்தை மனைவியை அற்ப கிரயத்திற்காக (வேலைக்கு அனுப்பி) பொக்கிஷத்தின் பவரை இழக்கலாமா ? சிந்திக்க வேண்டியவர்கள் சிந்தித்து இஸ்லாமிய அடிப்படையில் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டு ஒழுக்க சீலர்களாக வாழ்வதற்கு முன்வருவார்களா ? உலகப் பொருள்களில் மிகச்சிறந்தது நல்ல பெண்மணி ஆவாள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: முஸ்லிம

உலகம் முடியும் காலம்வரை இஸ்லாமிய சட்டம் நடைமுறைப் படுத்த சாத்தியமானதே ! அது ஏகஇறைவனின் சட்டமாகும் அதற்கு மாற்றமான சட்டமே நடைமுறைப்படுத்த சாத்தியமற்றது என்பதை பர்தா சட்டத்தை மீறும் பெண்களுடைய அவலநிலையை இன்று உலக ஊடகங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்