சனி, அக்டோபர் 15, 2011

.

يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاء الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். 33:59. 

 குட்டைப்பாவாடைக்கு குட் பை !

ஹைதராபாத்தைச் சேர்ந்த சானியா மிர்சா குட்டைப்பாவாடை அணிந்து கொண்டு அன்னிய ஆண்கள் மத்தியில் குணிந்து நிமிர்ந்து டென்னிஸ் விளையாடி இஸ்லாம் விதித்த உடை கட்டுப்பாட்டை மீறியதால் உலமாக்கள் கண்டித்தனர்.

பெண் பித்தர்களும், புதுமைவாதிகளும் கொதித்தெழுந்து ஐயகோ ! ஆணாதிக்கம் ஆட்டிப்படைக்கிறதே ! முஸ்லீம் பழமைவாதிகளின் அட்டூழியம் தாங்க முடியவில்லையே ! என்று புலம்பிக் கொட்டினர். உறங்கிக் கிடந்த பார்ப்பனீயம் இதனால் வீறுகொண்டெழுந்து இந்த சேடிஷ்டுகளின் புலம்பலைப் பொறுக்கி எடுத்து மதச் சாயத்தில் தோய்த்து தங்கள் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக பதித்து காசாக்கினர். 

புலம்பியவர்களும், புலம்பல்களை காசாக்கியவர்களும் தங்கள் குடும்பத்துப் பெண்களை உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை மூடி காலம் கெட்டுக் கிடக்குது பார்த்துப் போமா என்று புத்தி சொல்லித் தான்  வெளியில் அனுப்புவார்கள் என்பது தனி விஷயம். இவர்களின் வெறும் ஓலம் எல்லாம் சானியாவுக்கும், தஸ்லீமாவுக்கும், குஷ்புவுக்கும் தான்.

குட்டைப் பாவாடை அணிந்தது குற்றமா ? என்று கூக்குரல் எழுப்பியவர்கள் இன்று ஸ்விட்சர்லாந்தில் குட்டைப் பாவாடைக்கு குட் பை கொடுத்தனுப்பியதைக்கண்டு குமுறாதது ஏன் ? ஆனாதிக்கம், அடிப்படைவாதம் என்றெல்லாம் புலம்பாதது ஏன் ? அவர்கள் அவர்களைச் சார்ந்தவர்கள் இஸ்லாத்தை எதிர்ப்பதில் இருவரும் ஒரே வகையினர்.  

கற்பழிப்புக்கு காரணம் எது ? என்றுக் கண்டறிய சில வருடங்களுக்கு முன்பு அம்னஸ்டி அமைப்பு உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்களிடத்தில் நடத்திய கருத்து கணிப்பில் 25 க்கும் மேற்பட்ட சதவிகித இளைஞர்கள் பெண்கள் அணியும் குட்டைப் பாவாடையும், கட் ஜாக்கெட்டும் தான் (செக்ஸியான உடை) காரணம் என்றும் அயர்லாந்தில் மட்டும 40 சதவிகிதம் வழி மொழிந்தனர் என்று உலகுக்கு அறிவித்தது. இதை அறிவித்தது அம்னஸ்டி என்பதால் அடங்கிக் கொண்டனர்.  

செக்ஸியான உடை அணிந்து நடப்பதைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடும் ஆண்களில் 60 வயதிற்கு கீழ்பட்ட இளைஞர்களின் ஆண்மையைப் பறிக்கிறது என்றும், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு புரொஸ்ட்ரேட் என்ற புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்றும் ரஷ்யாவின் லீனாய்ட் என்ற உடற்கூறு மருத்துவர் கூறினார். இதைக் கூறியதும் ரஷ்ய டாக்டர் என்பதால் வாயடைத்துப் போயினர்.

மலேஷியாவில் வேலைக்குச் செல்லும் பெண்கள் சீரழிக்கப்படுவதை அறிந்த அரசு மேக்கப்பை தடைசெய்தனர், இதையும் மீறி பலாத்காரங்கள் நடைபெறவே காரணத்தைக் கண்டறிய ஆய்வை மேற்கொண்டதில் பெண்கள் அணியும் இறுக்கமான உடைகள் தான் காரணம் என்பதை அறிந்து உடலை முழுவதுமாக மறைக்கும் புர்கா அணிந்து பணிக்குவரும்படி 29-06-2008ல் சட்டமியற்றி நடைமுறைப்படுத்தியது இது இஸ்லாமிய நாடு என்பதால் இந்த நல்ல முன்மாதிரியை பிற நாடுகள் பின்பற்றத் தயங்கியது. 

ஒருப்பெண் ஒழுக்கமுடையவளா ? ஒழுக்கங்கெட்டவளா ? என்பதை அந்நிய ஆடவருக்கு உணர்த்துவதில் அவளின் நடை, உடை, பாவனையில் முக்கியப் பங்கு வகிப்பது அவள் அணியும் உடை தான் என்பதை 1400 வருடங்களுக்கு முன்பே துல்லியமாக கூறியது திருமறை நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். 33:59. 

இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட கண்ணியவான்களுக்கு விரசத்தைத் தூண்டும் வகையில் உடை உடுத்தக்கூடாது என்றும், எவ்வாறு உடை உடுத்த வேண்டும் என்றும் ஏராளமான கட்டளைகளை பட்டியலிட்டுக் கூறியது இஸ்லாம்.

இஸ்லாம் உடை உடுத்தும் விஷயத்தில் எவ்வாறு பட்டியலிட்டுக் கூறியதோ அவ்வாறே இன்று சுவிட்சர்லாந்தின் முன்னனி வங்கிகளில் ஒன்றான யு.பி.எஸ் வங்கியில் பணிபுரியும் ஆண், பெண் இருபாலாருக்கும் ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.

எவ்வாறான உடை உடுத்திக் கொண்டுப் பணிக்கு வரவேண்டும் என்பதை தனி நபரின் சிந்தனையில் தோன்றியதை செயலாற்றாமல் இதற்காகவென ஒரு குழுவை ஏற்படுத்தி நீண்ட ஆலோசனையில் விவாதித்து எடுத்த முடிவை 44 பக்கங்களில் பட்டியலிட்டு பணியாளர்களுக்கு கொடுத்திருக்கிறது. 

அந்தளவுக்கு விரச வகை உடைகளினால் ஈர்க்கப்ட்ட இளம் பணியாளர்களால் அல்லல் பட்டிருக்கிறது அந்த நிருவனம் என்பது இவ்வளவுப் பெரிய ஆலோசனைக்கு உட்படுத்தபட்டதன் மூலமாக விளங்கிக் கொள்ள முடிகிறது. 

சுப்ஹானல்லாஹ் ! திருமறை முழுவதும் அல்லாஹ் தான் பேசுகிறான் என்பதை ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த இறைமறுப்பாளர்கள் மத்தியில் திருமறை குர்ஆன் நிரூபித்து வந்திருக்கிறது. அதில் ஒன்று தான் ஸ்விஸர்லாந்து யு.பி.எஸ் வங்கியின் உடை கட்டுப்பாட்டு அறிவிப்பு.  

சதைகளை பிதுங்கச் செய்யும் இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது, பின்புறத்தை கவர்ச்சியாக எடுத்துக்காட்டும் குட்டைப்பாவாடை அணியக்கூடாது, அடர்த்தியான கலரில் உருவாக்கப்படும் உள்ளாடைகளை வெளியில் எடுத்துக்காட்டும் வகையிலான வெண்ணிறத்திலான மேலாடைகளை அணியக்கூடாது, கெரண்டைக் கால்களின் சதைகளை பிதுங்கச் செய்யும் இறுக்கமான ஷூக்களை அணியக் கூடாது, சுண்டி இழுக்கும் செயற்கை நிறத்திலான நகப் பாலிசுகளை இடக்கூடாது, அழகுக்கு அழகூட்டும் தங்க ஆபரணங்களை அணியக் கூடாது, ஆண்கள் டை கட்டக் கூடாது.

சாதாரண பேன்ட் சர்ட் இட வேண்டும், தொள தொளப்பான ஆடைகளையே இருபாலரும் அணிய வேண்டும், கருப்பு, சாம்பல், ஊதா நிறம் போன்ற கலரிலான தடிமனான ஆடைகளையே இருபாலரும் அணிய வேண்டும், உடலின் நிறத்துடன் ஒத்துப் போகும் படியான நிறத்திலான உள்ளாடைகளையே இருபாலாரும் அணிய வேண்டும். என்று இன்னும் ஏராளமான கட்டுப்பாடுகளை 44 பக்கங்களில் எழுதிக் கொடுத்திருக்கிறது.

வாயளவில் சொன்னால் கேட்க மாட்டார்கள் ஏற்கனவே சொன்னதெல்லாம் ஏட்டுச்சுரைக்காவாக இருப்பதை அறிந்த யு.பி.எஸ் வங்கி நிருவனம் வேலை வேண்டும் என்றால், பைசா வேண்டும் என்றால் ? (இஸ்லாம் கூறும்) கண்ணியமான உடையை உடுத்திக்கொண்டு வேலைக்கு வா, இல்லை என்றால் வீட்டில் இருந்துகொள் என்ற கன்டிப்பான கட்டளையை பிறப்பித்து முஸ்லீம் பழமைவாதிகளின் ஆனாதிக்க அடக்குமுறை தான் பெண்களுக்கான உடைகட்டுப்பாடு என்ற பெண்ணியக்கவாதி(?)களின் வெற்று விமர்சனத்திற்கு சாவு மணி அடித்து விட்டது. 

முன்கூட்டியே முழங்கிய திருமறை : ...அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம்... 24:31

...அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம்... 24:31

முன் கூட்டியே அறிவித்த நபிமொழி : கெரண்டை காலுக்கு கீழ் ஆடைகளை தொங்க விடக்கூடாது என்று அண்ணல் நபி(ஸல்) கூறியதைக் கேட்ட அன்னை உம்முஸலமா(ரலி)அவர்கள் பெண்கள் எதுவரை கீழ் ஆடைகளை தொங்கவிட வேண்டும் என்றுக் கேட்டதற்கு முழங்காலிலிருந்து ஒரு முழம் என்றுக் கூறினார்கள்... நூல்: திர்மிதி 1653.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்