சனி, டிசம்பர் 31, 2011

.

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


அடிமை விலங்குகளை உடைத்தெறிந்த அல்குர்ஆன்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்;...



அலைக்கழிக்கப் பட்டப் பெண் இணம் ஓர் ஃப்ளாஷ் பேக்



பெண்களுக்கு ஆன்மா உண்டா ? இல்லையா ? அவ்வாறு உண்டெனில் அது ஆணுடைய ஆன்மா போல் இருக்குமா ? அல்லது மிருகங்களுடைய ஆன்மா போல் இருக்குமா ? என்று சோதனையிடச் சொன்னது இன்று நாகரீகத்தின் உச்சானிக் கொம்பில் வீற்றிருப்பதாக கூறிக் கொள்ளும் மேலை நாடுகள் ?

உயர்ந்த நாகரீகம் பேணப்பட்ட காலம் என்று வர்ணிக்கப்படுகிற சங்க காலத்திலும் கூட பெண்கள் கொத்தடிமைகள் போலவே பேணப்பட்டனர்.

கீழ்சாதி என்று முத்திரை குத்தப்பட்ட தலித் பெண்கள் ஆரியர்களுடைய பார்வையில் கூட படக்கூடாது அவ்வாறு பட்டால் அன்றைய தினம் அவன் தீட்டாகி விடுவான் என்று அவாள்களுடைய மனு தர்மத்தில் எழுதப் பட்டு;ள்ளது.

அவாள்களுடைய ஆத்துப் பெண்களும் கூட பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்றும் கணவனுடைய மரணத்திற்குப் பிறகு '' சதி ''  (உயிருடன் கொளுத்தப் பட )  செய்ய வேண்டும் என்றும் எழுதப் பட்டுள்ளதுடன் இன்றுவரை அது ( சதி ) நடைமுறையில் இருந்து வருகிறது.

அரேபிய தீபகற்பத்தில் பெண் குழந்தை பிறப்பதை இழிவாகவும்> கேவலமாகவும் கருதி வந்ததுடன் பச்சிளம் சிசுவை உயிருடன் புதைத்து புதை குழியின் மீது எறி நின்று வெறுப்பு தீரும் வரை மிதித்து தள்ளினர். அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பற்றி என்று நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கறுத்து கவலைப் பட்டவனாகி விடுகிறான். 16:58, ... இழிவோடு இதை வைத்துக் கொள்வதா? அல்லது (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று எண்ணுகிறான்); கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது. . 16:59.

இது நாம் அங்கொன்றும்> இங்கொன்றுமாக எடுத்து கோடிட்டுக் காட்டி உள்ளோம் ஆண் வர்க்கத்தின் கோரப் பிடிகளில் பெண் இனம் சிக்கி அலைக்கழிக்கபட்ட வரலாறு நீண்ட நெடியதொரு வரலாறாகும்.

இப்படிப்பட்ட மோசமான ஒரு காலகட்டத்தில் தான் அவர்களை நோக்கி அல்குர்ஆன் கீழ்கானுமாறு பிரகடனப் படுத்திற்று

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள் , அவரிலிருந்து அவரது துணையைப் (மனைவியை) படைத்தான், அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பெருகச் செய்தான்;. ... 4:1

பெண் இனம் உலகில் எவ்வாறு தோற்றுவிக்கப்பட்டது ? எதற்காக தோற்றுவிக்கப்பட்டது ? என்பதை பெண்ணினத்தை அலைக்கழித்த ஆண் வர்க்கத்தை நோக்கி அல்குர்ஆன் மேல்கானுமாறு கூறி தெளிவு படுத்தியது. அல்குர்ஆன் தெளிவு படுத்தியது போன்று குர்ஆனை மறுக்கக் கூடிய இறைமறுப்பாளர்;களுடைய ஆகமங்கள் எதுவும் தெளிவு படுத்த வில்லை அல்லது தெளிவுபடுத்தப்பட்டதை மறைத்தனர் என்பதுவே உண்மையாகும் அதனால் தான் இந்த ( பெண் ) ஆன்மா எந்த ஆன்மாவைச் சேர்ந்தது என்று பரிசோதிக்க உத்தரவிட்டனர். அவரிலிருந்து அவரது துணையைப் (மனைவியை) படைத்தான்> அது மனித ஆன்மா தான் வேறெந்த இனத்தையும் சார்ந்த ஆன்மாவல்ல என்று அல்குர்ஆன் பிரகடனப் படுத்தியப் பின் முதன் முதலில் அரேபயி தீபகற்பத்தில் பெண் சிசுக்கள் உயிருடன் புதைக்கப்படுவது ஒழித்துக் கட்டப்பட்டது. 

அதுமட்டுமல்லாமல் அன்றைய ரோம> பாரசீகங்களில் போர்களில் பிடிக்கப்படுகின்ற பெண்களுடைய தலை முடி சடைகளை வெட்டி எடுத்து கயிறுகளாக திரிக்கப்பட்டு சந்தைகளில் உயர்ந்த விலைக்கு விற்கப்பட்டதுடன் வரம்பு மீறி அவர்களை துஷ்பிரயோகம் செய்து தங்களது இச்சைக்கு பலவந்தப் படுத்தப்பட்டனர்.

நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை வலுக்கட்டாயமா அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. ... 4:19

என்றுக் கூறி பெண்களை பலவந்தப்படுத்தி இச்சைக்கு இணங்க வைத்ததை அல்குர்ஆன் தடைசெய்ததுடன்.

உங்களில் எவருக்குச் சுதந்திரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ> அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;). அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்;. ஆகவே முஃமினான அடிமைப் பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு, மணமுடித்துக் கொள்ளுங்கள் - அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்;. 4:25 .

என்று போரில் பிடிக்கப்படுகின்ற அடிமைப் பெண்களை அதிகார துஷ்பிரயோகம் செய்து வந்ததை தடுத்து அவர்களுடைய எஜமானர்களுடைய அனுமதிபெற்று திருமணம் செய்து அவர்களுக்கும் வாழ்க்கை வசதியை செய்து கொடுக்கச் சொன்னதுடன் அவர்களுக்கும் மற்றப் பெண்களுக்கு கொடுப்பதைப் போன்றே மஹர் தொகையையும் கொடுக்கச் சொல்லி அடிமை விலங்கை உடைத்தெறிந்து சமூக அந்தஸ்தை ஏற்படுத்தியது சங்கை மிருந்த திருக்குர்ஆன். 

அதுமட்டுமல்ல இந்த உலகம் முடியும் காலம் வரை பெண்களுக்கு இஸ்லாம் அமைத்துக் கொடுத்த பாதுகாப்பு வேலி போல் எந்த ஒரு சட்டமும் இன்றளவும் எவரிடத்தில் வேத ஆகமங்கள் இருப்பதாக கூறுகிறார்களோ அவர்களது எந்த வேத ஆகமத்திலும் குறிப்பிடப் படவில்லை.

ஒரு பெண் விபச்சாரம் போன்ற குற்றச் செயலில் ஈடுபட்டு விட்டதாக ஒருவர் கூறி விட்டால் ( அவர் செல்வாக்குள்ளவராக இருந்தால் ) போதும் அந்தப் பெண்ணைக் கொண்டு வந்து கரும்புள்ளி செம்புள்ளிக் குத்தி ஊர்வலம் விடப்படுவதை இன்றளவும் கிராமங்களில் கண்டு வருகிறோம்.

உங்கள் பெண்களில் எவளேனும் மானக்கேடான செயல் செய்துவிட்(டதாகக் குற்றம் சுமத்தப்பட்)டால், அதை நிரூபிக்க உங்களிலிருந்து நான்கு பேர்களை அழையுங்கள்;... 4:15.

வலுவான சாட்சியங்களை கொண்டு வரச் சொல்வதன் முக்கிய நோக்கம் தனது இச்சைக்கு இணங்க மறுக்கும் ஒரு அபலைப் பெண்ணை பழி வாங்குவதற்கு நடத்தைக் கெட்டவள் என்றுக் கூறி எளிதில் பழிவாங்கி விடலாம் அதனால் அல்குர்ஆன் சாட்சிகளை அதிகப்படுத்தி சதிகாரர்களின் சதி முயற்சிகளை முனை மழுங்கச் செய்தது.

பழசுக் கசந்து புதியதை தேடி கிளை விட்டு கிளை பாய நினைக்கும் ஆடவனுக்கு நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால் முந்தைய மனைவிக்கு ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும் அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள்... 4:20

உப்பு சப்பில்லாத கரணத்தை கையில் பிடித்துக் கொண்டு தலாக் கொடுத்து விட்டு வேறு ஒரு புதுப் பெண்ணை மனமுடிக்க நினைப்பருக்கு முந்தைய அந்த மனைவிக்காக அதற்கு முன் எதை உருவாக்கிக் கொடுத்திருந்தாலும் அது என்ன விலையாக இருந்தாலும் அதைத் திரும்ப பெற முடியாதளவுக்கு சட்டம் வகுத்துக் கொடுத்து  பெண்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தியது சங்கைக்குரிய திருக்குர்ஆன்.

திருமனம் செய்து கொடுத்து விட்டால் பெண்ணுக்குப் புகுந்த இடம் தான் கடைசிப் புகலிடம் அவளுக்கு அவனது கணவனுடைய சொத்துக்களே போதுமானதாகும் என்றுக் கூறி அவளை தாய், தந்தையருடைய சொத்துக்களிலிருந்து; பங்கு கொடுக்காமல் துரத்தி விட்டு விடுவார்கள் தந்தை பெரிய நிலச்சுவான்தாராக இருந்தாலும் இந்த நிலை தான் நீடித்தது.

பெற்றோரோ> நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு. அவ்வாறே பெற்றோரோ> நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும். 4:7      என்றுக் கூறி பெண்களுக்கு தன்னை ஈன்றெடுத்த தனது தாய்> தந்தையருடைய சொத்துக்களில் பங்கு பெறச்செய்து அதற்கு முன்பு அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை உடைத்தெறிந்து ஒருவர் பெற்றெடுத்தப் பிள்ளைகளுக்கு மத்தியில் ஆணாக இருந்தாலும்> பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்குள் சமநிலையை ஏற்படுத்தியது கண்ணியமிக்க அல்குர்ஆன்.

திருக்குர்ஆன் இறக்கியருளப் படுவதற்கு முன்பு பெண்னிணத்திற்கு இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளையும் அல்குர்ஆன் இறங்கிய அரேபிய தீபகற்பத்தில் நடைமுறைப் படுத்தி ஒழித்துக்கட்டியதுடன் இஸ்லாம் அரேபயிய தீபகற்பத்தையடுத்து உலகை கோலோச்சி வந்த ரோம> பாரசீகத்தை அடைந்து அங்கு சிறுமைப் படுத்தப் பட்டிருந்த பெண்ணினத்தின் அடிமை விலங்குகளையும் உடைத்தெறிந்தது> அதற்கடுத்து ஐரோப்பா> இந்தியா போன்ற நாடுகளுக்கும் இஸ்லாம் பரவிச் சென்று அங்கு சிறுமைப் படுத்தப் பட்டிருந்த பெண்ணினத்தின் அடிமை விலங்குகளையும் உடைத்தெறிந்தது.

இன்று உலகம் முழுவதிலுமுள்ள பெண்கள் ஆண்களுக்கு நிகராக ஆண்வர்க்கததினரால் ஆதிக்கம் செலுத்த முடியாமல் சமநிலை வாழ்வு வாழ்வதற்கு அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து> அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ... 4:1 என்ற குர்ஆனின் பிரகடனமே முக்கியக் காரணமாக அமைந்;ததென்றால் எனதருமைய சகோதரிகளே ! குர்ஆனை இந்தப் புனித ரமளான் மாதத்தில் ஓதுங்கள் ஓதியதுடன் அது கூறும் ஏவல் - விலக்கல்களை முறையாகப் பேணி வாழ முயற்சி செய்யுங்கள் இது உங்களுக்கு ரமளானுக்குப் பிறகும் பின் தொடர ஏதுவாக அமைந்து விடும்.

இறுதியாக ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் பெண்ணை விட ஆண் இனம் உயர்வாக கருதப்படுகிறது   (ஆண்> பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். . . 4:34     

ஆண்கள் பெண்களுக்கு பொருளீட்டிக் கொடுத்து அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதால் பெண்ணை விட ஆணை சற்று உயர்த்திக் கூறப்படுகிறது. 
 


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்