திங்கள், அக்டோபர் 24, 2011

.


பூவரசிக்கு ஆயுள் தண்டனை !?
 
பூவரசிக்கு ஆயுள் தண்டனை அளித்து நீதியை நிலை நாட்டி விட்டது இந்திய நீதித் துறை. அவரும் ஆயுள் தண்டனையை முகம் சுளிக்காமல் ஏற்றுக்கொண்டு விட்டார். மனசாட்சிக்குத் திரையிட்டு சிறுவன் ஆதித்யாவை கொடூரமான முறையில் கொலை செய்தக்காரணத்தால் ஆதித்யாவின் பெற்றோரை விட பொதுமக்கள் பூவரசியின் மீது கோபத்தால் கொந்தளித்துள்ளதாலும், ஆதித்யாவின் தந்தை ஜெயக்குமாரிடம் காதல் என்றப்பெயரால் ஏமாறுவதற்கு முன் புதுச்சேரியில் வேறு ஒருவனிடம் இதே காதல் என்றப் பெயரால் உடலைக் கொடுத்து மானத்தை இழந்ததை அறிந்த அவரதுப் பெற்றோர் அவரை வீட்டிலிருந்து வெளியேற்றி விட்டக் காரணத்தாலும் வெளியில் வேறுப் புகலிடம் இல்லாத பூவரசி இப்போதைக்கு சிறைக் கூடமே சிறந்த பாதுகாப்பு என்பதை கருத்தில்கொண்டு ஆயுள் தண்டனைத் தீர்ப்பை வருத்தமின்றி ஏற்றுக்கொண்டு ஆயுள் கைதிகளுக்கான சீருடையை அணிந்துகொண்டு சிறை வாழ்க்கையைத் தொடங்கி விட்டார்.

ஏறத்தாழ பூவரசியின் வாழ்க்கை அஸ்த்தமனத்தை நோக்கி நகரத் தொடங்கி விட்டது, சிறுவன் ஆதித்யாவின் கதை அப்பொழுதே முடிந்து விட்டது. ஆனால் இதற்கெல்லாம் மூல காரணகர்த்தாவாகத் திகழ்ந்த காமுகன் ஜெயக்குமார் தனது மனைவியுடன் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் (இன்னும் பிறப் பெண்களுடனும் காதலிப்பதாக பொய் கூறி ஏமாற்றி அனுபவித்துக் கொண்டுமிருக்கலாம் ? )

பூவரசி ஒரு எம்.எஸ்.சி. பட்டதாரி சிப்காட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் பணி புரிந்தவர் கொலை செய்வது, கொள்ளை அடிப்பது அவரது முந்தைய வாடிக்கையாக இருக்கவில்லை அந்தப் பழக்கத்தில் ஆதித்யாவை அவர் கொலை செய்யவுமில்லை. முதல் காதலில் ஏமாற்றப்பட்டுப் பெற்றோரால் விரட்டியடிக்கப்பட்டதும் சென்னை வந்து வேலைத் தேடிய பூவரசிக்கு தான் வேலை செய்யும் கம்பெனியில் 50 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் சேர்த்து விடுவதாகக் கூறி காதல் வலையில் வீழ்த்தி உள்ளார் ஏற்கனவே திருமணமாகி குழந்தை குட்டிகளுடன் உள்ள ஜெயக்குமார்.
ஜெயக்குமார் திருமாணமான தகவலறிந்தப் பின் எனக்கும் மனைவி என்ற அந்தஸ்தை வழங்கி வாழ வையுங்கள் என்றுக் கெஞ்சிக் கேட்டப்பின்பும் அதற்கு மறுத்து என் வயிற்றில் வளர்ந்த அவரின் கருவை அவரே இறக்கமின்றி இரண்டு முறை கலைக்கச்சொல்லி கட்டாயப்படுத்தியது தான் அவருடைய வளர்ந்தக் கருவாகிய ஆதித்யாவை இறக்கமின்றி கொலை செய்வதற்கு என்னைத் தூண்டியது என்று அவரை விசாரித்தப் போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்ததுடன் அதை நீதிமன்றத்திலும் கூறினார் ஜெயக்குமாரும் அதை மறுக்கவில்லை (எத்தனை தான் ஏமாற்றப்பட்டாலும் அதற்காக பழி தீர்க்க பச்சை சிசுவை கொலை செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என்றாலும); இதற்கு காரணமாக இருந்த ஜெயக்குமாருக்கு எந்த தண்டனையுமில்லை என்பது தான் வருத்தமளிக்கிறது.

இதில் இன்னும் வேதனை அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் பூவரசிக்கு ஆயுள் தண்டனை என்று தீர்ப்பளிக்கப்பட்ட நாள் பிப்ரவரி 15, இந்தியப் பெண்கள் தங்கள் மானத்தை காதல் என்றப் பெயரால் கடைவிரிக்க அனுமதிக்கப்பட்ட நாள் (காதலர் தினம்) பிப்ரவரி 14.

மேல்படித் தீர்ப்பை குறைந்தபட்சம் பிப்ரவரி 14க்கு ஒரு வாரம் முன்பு அளித்துவிட்டு ஆதித்யாவின் கொலையும், பூவரசியின் ஆயுள்தண்டனையும் காதல் என்றப்பெயரில் நடந்த மோசடியின் பின்விளைவுகள் தான் என்று நீதிபதி தனது தரப்பிலிருந்து ஒரு அறிக்கையை சேர்த்து வாசித்துவிட்டு காதல் என்றப் பெயரால் ஏமாறும் பெண்களே உஷாராகிக் கொள்ளுங்கள் என்றுக்கூறி இருந்தால் ஓரளவாவது பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் ஆனால் கேடுகெட்ட காதலர் தினமாகிய 14ஐ கடத்தி விட்டு 15ல் இந்தத் தீர்ப்பை வழங்கியதன் மூலம் காதல் எனும் பெயரால் அப்பாவிப் பெண்களை சீரழிப்பதற்கு ஆண்களை அரசே ஊக்குவிப்பதாக தோன்றுகிறது.

காதல் என்ற வழிகேட்டால் 99 சதவிகிதம் பெண்கள் பாதிக்கின்றனர், ஏமாற்றப்பட்டப் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர், தன் மகள் காதல் என்றப் பெயரால் கற்பிழந்த செய்தி அறிந்து பல தாய் - தந்தையர் ஹார்ட்அட்டாக் ஏற்பட்டு அகால மரணத்தைத் தழுவி இருக்கின்றனர், பல தாய் - தந்தையர் கோமாவில் வீழ்ந்துள்ளனர்.

சமுதாயத்தில் மிகப்பெரிய சீரழிவையும், தலை குணிவையும் ஏற்படுத்தும் காதல் என்ற சீர்கேட்டை  ஒருப்புறம் அரசு அனுமதித்துக் கொண்டு மறுப் புறம் அதில் ஏமாற்றப்படும் பெண்களுக்கு விசாரித்து நீதி வழங்குவதில்லை. 

ஆண்களிடம் ஏமாந்து விடாதீர்கள் உங்கள் கற்பை நீங்கள் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த நவம்பர் 15 அன்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி கைலாஷ் காம்பீர் பெண்களுக்கு உபதேசம் செய்திருந்தார். ஆனால் காதல் என்றப்பெயரால் அப்பாவிப் பெண்களின் கற்பை சூறையாடும் ஆண்களை மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தி உறுதி செய்து கொண்டு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கை செய்ய வில்லை.

மானக்கேடான செயல்களில் ஈடுபடும் இரு பாலரையும் தண்டியுங்கள் என்றுக் கூறி ஆண்-பெண் இரு பாலரையம் சமன் படுத்தியது இஸ்லாம். உங்களில் வெட்கக்கேடானதைச் செய்த அவ்விருவரையும் கஷ்டப்படுத்துங்கள்!...4:16

ஹிந்து வேதங்களில் கூறப்பட்ட பெண்ணடிமைத்தனம் இன்று வரை ஒழிக்கப்படவில்லை என்பதற்கு மேற்காணும் நிகழ்வுகள் சான்றுப் பகிர்கின்றன. 


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்