புதன், அக்டோபர் 12, 2011

.


திருமணத்திற்கு முன் கூடுமாம் திருமணத்திற்கு பின் கூடாதாம் ? விசித்திரமான தீர்ப்பு !


காதல் என்றப் பெயரால் கற்பை இழந்து வாழ்க்கை ஞான சூன்யமாக ஆகி தற்கொலை செய்து கொண்டு பலியாகும் இளம் பெண்கள் இந்தியாவில் ஏராளம் அதற்கு காரணமாக அமைவது இந்தியாவை ஆளும் மனிதர்கள் உருவாக்கிய சட்டமும் சில நீதிபதிகளின் தான்தோன்றித்தனமான தீர்ப்புகளும் முக்கியப் பங்கு வகித்து விடுகிறது.

சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த  தீபர் மிர்வானி என்பவர் இண்ணொருவருடைய மனைவியுடன் கள்ளக் காதலில் ஈடுபட்டதன் விளைவாக அவர் மீது வழக்குப் தொடரப்பட்டது. அது நிரூபிக்கப்பட்டால் இந்திய தண்டனைச் சட்டம் 497-வது பிரிவின் கீழ் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து கிடைக்கும் என்பதை அறிந்த தீபர் மிர்வானி இன்றைய இந்திய சூழலுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது என்றும் 479-வது பிரிவின் கீழ் உள்ள மேல்படி சட்டத்தை மாற்றி அமைத்து தன்னுடைய கள்ள காதலை அனுமதிக்கும் படியும் தன் மீதான கீழ் கோர்ட் விசாரனையை ரத்து செய்யும்படியும் ஹைகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.
 
திருமணம் ஆனவர்கள் கள்ளக்காதலில் ஈடுபட்டால் நாகரீகமான சமுதாயம் உருவாகாது 497-வது சட்டப்பிரிவுக்கு விடப்பட்ட சவாலை ஏற்றுக் கொண்டால் திருமணபந்தம் கேலிக் கூத்தாகிவிடும் என்றும் அதனால் திருமணம் ஆனவர்கள் கள்ளக்காதலில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது ஆனால் திருமண பந்தத்திற்கு வெளியில் (திருமணமாகாத ஆண்,பெண்) செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறி வழக்கு விசாரனையை தள்ளி வைத்து தீர்ப்புக் கூறி உள்ளார்.

தீபன் மிர்வானிக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் நிதின் பிரதான் சம்பிரதாய நடைமுறைகளை காரணம் காட்டி கள்ளக்காதலை மறுக்கக் கூடாது என்றும் கணவனோ அல்லது மனைவியோ தாம்பத்தியத்திற்கு தகுதி இல்லாதவர்களாக மாறும் பொழுது தான் வேலி பாயும் நிலை உருவாகிறது அதனால் தனது கட்சிக் காரரின் கோரிக்கையை ஏற்று இந்திய தண்டனைச் சட்டம் 479-வது பிரிவை மாற்றி வாசல் வழியாக செல்ல அனுமதிக்குமாறு வாதிட்டுள்ளார்.

இஸ்லாமிய சட்டம் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பது மேற்காணும் குளறுபடி தீர்ப்பும் அறிவுக்கு ஒவ்வாத வாதப் பிரதிவாதங்களும் சான்றாகும். உலகம் முடியும் காலம் வரை கள்ளக்காதலுக்கு சாவு மணி அடித்த கீழ்காணும் இஸ்லாமிய தீர்ப்பு.


ஸாபித் இப்னு கைஸ் இப்னி ஷம்மாஸ்(ரலி) அவர்களின் துணைவியார் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் ஸாபித் அவர்களின் மார்க்கப் பற்றையோ, அவரின் குணத்தையோ குறை சொல்லவில்லை. ஆயினும் நான் இறை நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்'' என்று (அவரிடமுள்ள தாம்பத்திய குறையை ) கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'சரி! அவரின் தோட்டத்தை அவரிடமே திருப்பித் தந்து விடுகிறாயா?' என்று கேட்டார்கள். அதற்கு அவரும் 'ஆம்' என்று கூறினார்கள். பின்னர், (அந்தத் தோட்டத்தை) ஸாபித் அவர்களுக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார். நபி(ஸல்) அவர்கள் ஸாபித் அவர்களுக்கு உத்தரவிட, அவரும் தம் மனைவியிடமிருந்து (விவாகரத்து செய்து) பிரிந்துவிட்டார். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள். நூல்: புகாரி 5276




وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்